தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுக இல்லை ஆளுநர் தான் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

By Velmurugan s  |  First Published Jul 11, 2023, 4:48 PM IST

தமிழகத்தில் எதிர்கட்சி அதிமுக கிடையாது ஆளுநர் ரவி தான் ஆளும் கட்சி போன்று செயல்படுவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. சுமார் 64 ஆயிரத்து 035 சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.12 கோடியே 45 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான விவசாய நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துவிட்டதாக சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள  காமாட்சி அம்மன் கோயில் நிலம் அபகரிப்பு வழக்கில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும். வீடு, நிலம் மோசடிகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சாரம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர்வலமாக புறபட்டு வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest Videos

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி

பேரணியின் போது கோவில் அபகரிப்பில் ஈடுப்பட்ட பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், பாஜக அல்லாத மாநிலங்களை சீர்குலைப்பதற்காக அவர்களால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆளுநர்களும் எதிர்க்கட்சி போல் செயல்பட்டு வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி இல்லையென்றால் வானதி காணாமல் போய்விடுவார் - ஆளுநர் பேச்சு

தமிழகத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சியினர் அதிமுக இல்லை, ஆளுநர் ரவி தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு. தமிழகத்தில் போட்டி அரசியல் நடத்துகிறார். அரசாங்கத்தை விமர்சிக்கிறார். அரசின் கொள்கைகளை விமர்சிக்கிறார். எனவே ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அது வரவேற்கத்தக்கது என கூறினார். ஆளுநருக்கு அரசியல் செய்ய அதிகாரம் கிடையாது. தமிழிசை கூறுவது தவறான ஒன்று என கருத்து தெரிவித்துள்ளார்.

click me!