எஸ்.பி.வேலுமணி இல்லையென்றால் வானதி காணாமல் போய்விடுவார் - ஆளுநர் பேச்சு

By Velmurugan s  |  First Published Jul 11, 2023, 4:05 PM IST

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியுடன் பயணிக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை, வேலுமணி எதிரணியில் இருந்தால் வானதி சீனிவாசன் காணாமல் போய்விடுவார் என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை சிட்டிசன் பார்ம்  அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொருப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஸ்ணனுக்கு பாராட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை தொழில் அமைப்பினர், எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன், எல்.முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஸ்ணன் கூறியதாவது, இங்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். 

கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், அதன் மூலம் மாவட்டம், மாநில பொருளாத்தராத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வானதி போன்ற தலைவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதால், சாதனைகளை, நிறைவேற்றுவதால் தேர்தல் வெற்றி வந்துவிடாது. எஸ்.பி.வேலுமணி அண்ணனை போல எல்லா வித்தைகளையும் கற்றிருக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி

நடைமுறை அரசியலை செய்யாததால் நான் தொடரந்து இரண்டு முறை வெற்றி பெற்று மூன்று முறை தோற்றேன். நான் பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த போதும் அண்ணாமலை, வானதியை சந்தித்து பேசினேன். அப்போது அண்ணாமலையிடம் நான் கூறுவதை இன்றாவது கேளுங்கள் என கூறினேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். எனது தனிபட்ட கொள்கைகளை புகுத்தியதால் நான் தோல்வியடைய நேர்ந்தது. அப்படி நீங்களும் தோற்க வேண்டும் என நான் நினைக்க மாட்டேன். நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிர் முகாமினர் எந்த வியூகங்களை வகுக்கிறார்களோ, அதற்கு மாற்று வியூகங்களை வகுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதை நீங்கள் செய்ய வேண்டும் என கூறினேன்.

கடந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு பின் 51 ஆண்டுகளாக கோவையில் இருந்து புறப்பட 2 ரயில்கள் தான் இருந்தது, 1998ல் இருந்து 2004 வரை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது கொங்கு விரைவு ரயில், கோவை – மும்பை திலகர் விரைவு ரயில், மயிலாடுதுறை விரைவு ரயில், சென்னைக்கு பின் கேரளாவிற்கு கோவையில் இருந்து செல்லும் மின்சார ரயில் புதிய திட்டம் கொண்டு வந்தோம். ஆனால் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தேன். 

முதல்வர் ஸ்டாலின் இதை செய்யாவிட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்

பாடிக்கொண்டே இருக்க வேண்டியது தான் ”வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை, புத்திசாலி மனிதர் எல்லாம் வெற்றி பெற்றதில்லை” என,  சந்திரபாபுவே காணாமல் போனால் நாமும் அதே போல் தான். எனவே வானதி கண்ணுங்கருத்தா பார்த்து கொள்ள  வேண்டும், வேலுமணியுடன் பயணிக்கும் வரை உனக்கு பிரச்சனை இல்லை எதிரணியில் இருந்தால் நீ காணாமல் போய்விடுவீர்கள் என பேசினார்.

click me!