பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் ஓபிஎஸ்...! இறங்கி அடிக்கும் இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Sep 8, 2022, 2:18 PM IST
Highlights

கட்சியின் இரட்டை இல்லை சின்னத்தை முடக்க வாய்ப்பில்லை, புகார்கள் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். 96 % பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். பெரும்பாலான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். சட்ட ரீதியாக யாரும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகம் சென்று தனது பணியை தொடங்குவார் என எதிர்பார்க்க்ப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றியதால் மிகப்பெரிய வன்முறையே ஏற்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சுமார் 72 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு சென்றார். அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு ரோஜா மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் ஆனந்த மகிழ்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலக வாயிலை மூன்று முறை தொட்டு வணங்கி உள்ளே சென்றார்.  

முதியோர் உதவி தொகை ரத்தா..? கொடுமையிலும் கொடுமை... கொடுத்ததை பறிக்கும் திமுக - ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

அதிமுகவில் பிளவு இல்லை

இதனை தொடர்ந்து அதிமுக அலுவலகம் வந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  புதிதாக பொறுப்பேற்ற அதிமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை இடைகால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொது குழு உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சிலர் அதிமுகவிற்கு சொந்தமான பாத்திரங்களை திருடி சென்று உள்ளனர்.  வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சிக்கு கலங்கம் விளைவித்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நீதிமன்ற உத்தரவு இருந்தும் விசாரணை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இருப்பினும் நேற்றைய தினம் தான் சி பி சி ஐ டி அதிகாரிகள் தடயங்களை சேகரித்து சென்றுள்ளதாக கூறினார். அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து, மீண்டும் ஜெயலலித வின் அரசை அமைக்க வேண்டும் என்பதே தொண்டர்களுக்கு நான் சொல்லும் கருத்து. அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது ஒரு சிலர் கட்சிக்கு எதிராக செயல்ப்ட்டதால் பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புற்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கும் ஜெயலலிதா சிலை ...! செவிசாய்க்காத திமுக...! ஓபிஎஸ் ஆவேசம்

ஓபிஎஸ்யை ஏற்று கொள்ள முடியாது

ஓ.பி.எஸ் மன்னிப்பு கேட்டாலும் ஏற்று கொள்ள முடியாது, தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள். அதிமுகவில் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் குண்டர்களோடு அதிமுக அலுவலகத்தை சூறையடியததை நாட்டு மக்களே பார்த்தார்கள். தொண்டர்களுக்கு தான் இந்த கட்சி தலைவர்களுக்கு கிடையாது என கூறினார். ஓ.பி.எஸ் திமுகவுக்கு பினாமியாக செயல்படுகிறார். கட்சியின் சின்னத்தை முடக்க வாய்ப்பில்லை, புகார்கள் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். 96 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். பெரும்பாலான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர்.  சட்ட ரீதியாக யாரும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என கூறியவர்.  பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓ.பி.எஸ் என விமர்சித்தார். திமுக துணையோடு எவ்வளவு தடைகளை ஓ.பி.எஸ் ஏற்படுத்தினாலும் எவ்வளவு அமைதியாக பொதுகுழுவை நடத்தி காட்டினோம் இதுதான் ஒற்றுமை இதுதான் பலம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

துணை மேயருக்கு இரண்டாம் வரிசை...மேயருக்கு 3 ஆம் வரிசையா..? அரசு நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்படுகிறாரா பிரியா..

 

click me!