ஓபிஎஸ் கதி என்ன ஆகும்? அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

By SG BalanFirst Published Mar 27, 2023, 7:08 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரின் அணிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்கிறது

2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், மார்ச் 28 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே. சி.டி. பிரபாகரன் ஆகிய நால்வரும் தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் இதற்கு முன் மார்ச் 22ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணை முழுமையாக முடிந்த நிலையில், நீதிபதி கே. குமரேஷ் பாபு  நாளை தீர்ப்பு அளிக்க இருக்கிறார்.

ஸ்மிருதி இரானி குறித்து கொச்சையாகப் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஶ்ரீனிவாஸ்

கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தார். பொதுச்செயலளார் பதவிக்கு அவரைத் தவிர வேறு யாரும் முன்வராத நிலையில், ஓபிஎஸ் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் நடைமுறைகளை தொடர அனுமதித்து, வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஓபிஎஸ் அதிமுகவில் உறுப்பினராகவே இல்லை என்று கூறிவரும் நிலையில், ஜூலை 22ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்துவிட்டு, பழைய விதிகளின்படி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தினால் தானும் போட்டியிடுவேன் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிவருகிறார். இச்சூழலில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் நாளை வெளியாகும் உயர் நீதிமன்ற தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

2 மாத குழந்தையைக் கொன்ற சிறுமிகள்! பொம்மை போல நினைத்து விளையாடியதால் நேர்ந்த விபரீதம்!

click me!