அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என இபிஎஸ் கூறியதற்கு டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என இபிஎஸ் கூறியதற்கு டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டியளிக்கையில்;- நான் பலமுறை கூறிவிட்டேன். பதவி வெறி மற்றும் ஒரு சிலரின் சுயலாபத்தால் அம்மாவின் இயக்கம் தொடர்ந்து பலவீனப்பட்டு வருகிறது. அதனை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும். அதிமுகவில் என்னை போல ஒரு லட்சம் பழனிசாமி இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று இபிஎஸ் கூறியிருந்த நிலையில் அதிமுக ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்து கொள்கின்றனர் என டிடிவி.தினகரன் விமர்சித்தார்.
கடந்த 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தால் அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கலாம் என கூறப்பட்டது. ஒருவர் ஒரு பதவியில் இருக்கும் போது அவரது பதவி பறிபோனால் மேல்முறையீடு செய்து இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த பதவியில் இருக்கலாம் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ராகுல் காந்தி கொண்டு வந்த சட்டம் இன்றைக்கு அவரையே பாதித்துள்ளது. இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என டிடிவி.தினகரன் கூறினார்.
மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நிறைய மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்ததற்கு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிக்க சென்றுவிட்டதாக அத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்கள் கல்வி தொடர்பான புள்ளி விபரங்களோடு தெளிவுப்படுத்த வேண்டும். அது அமைச்சரின் கடமை எனவும் டிடிவி.தினகரன் கூறினார்.