சசிகலாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் - மகிழ்ச்சியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்

By Velmurugan s  |  First Published Mar 27, 2023, 1:55 PM IST

அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்ற வி.கே சசிகலாவின் கருத்துக்கு ஓபிஎஸ் ஆதரவு, அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று குத்தாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.


மயிலாடுதுறை மாவட்ட ஓபிஎஸ் அணி மாவட்ட கழக செயலாளர் குத்தாலம் டி.கஜேந்திரன் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து மணமக்கள் ரஞ்சித் மற்றும் புவனேஸ்வரி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். திருமண விழாவில் ஏராளமான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறிய போது, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று வி.கே சசிகலா கூறி இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இதைத்தான் நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.

சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் பதவிக்கு போட்டியிடலாம். ஆனால் அவர்கள் கழக விதியை மாற்றி 10 மாவட்ட செயலாளர் முன்மொழிந்து 10 மாவட்ட செயலாளர் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் என்று விதிகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம்.

Latest Videos

புதுவையில் பாஜக முக்கிய பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

அடிமட்ட தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுகாலம் முழுமையாக தமிழகத்தை வழிநடத்தி ஆட்சி புரிந்த கட்சி அதிமுக என்ற நிலையை அம்மாவும், புரட்சித்தலைவரும் உருவாக்கினார்கள். அதைத் தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். கழகத்தின் சட்ட விதிப்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும் ஏற்கனவே பழைய உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். 

உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டவர்களுக்கு எல்லாம் அவர்களை வைத்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அப்படி செய்தால் உறுதியாக, கீழ் மட்ட தொண்டர்கள் கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து மாண்புமிகு அம்மா காலம் வரை கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

click me!