யார் கை ஒங்கபோகிறது? அதிமுக பொதுக்குழு வழக்கை மீண்டும் கையில் எடுத்த சென்னை ஐகோர்ட்! இன்று என்ன நடக்கும்?

By vinoth kumarFirst Published Jun 8, 2023, 9:23 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கோடை விடுமுறை காரணாமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை நடைபெறுகிறது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. 

இதையும் படிங்க;- என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும்? பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! காரசார வாதம்

அப்போது,  ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கட்சியில் இருந்து நீக்கியது தவறு எனத் தெரிவித்த  தனி நீதிபதி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை. இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. என்னை நீக்கியது தவறுவென்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும் என்றும் வாதிட்டார்.

இதையும் படிங்க;-  ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்.. வாண்டடாக வந்து சிக்கிய இபிஎஸ்? அதிர்ச்சியில் அதிமுக..!

இதனையடுத்து, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்ம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வாதிட்டனர். ஆனால், ஓபிஎஸ் இடைக்கால நிவாரண கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஏப்ரல் 20ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தி வந்த நிலையில், கோடை விடுமுறை காரணமாக வழக்கு விசாரணையை ஜூன் 8 ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்று இறுதி விசாரணை நிறைவு பெறும் பட்சத்தில் தீர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க;-  எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை.. தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்..!

click me!