தினமும் 2500 லிட்டர் ஆவின் பால் திருட்டு! இது ஆட்சியாளர்களுக்கு தெரியாம நடந்திருக்க வாய்பே இல்லை! டிடிவி பகீர்

By vinoth kumar  |  First Published Jun 8, 2023, 8:36 AM IST

சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் 2500 லிட்டர் பால் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இங்கிருந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் பெறப்பட்டு  சுமார் 93,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் 600-க்கும் மேற்பட்ட முகவர்களுக்கு ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் 2500 லிட்டர் பால் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- வேலூர் ஆவின் பால் பண்ணை பால் திருட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு? இதன் மதிப்பு இத்தனை கோடியா? ராமதாஸ்..!

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கண்காணிப்பு கேமராக்கள், வருகைப் பதிவேடு, ஒப்பந்த வாகனங்கள் பதிவேடு என பல்வேறு கண்காணிப்பு முறைகள் இருந்தபோதிலும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வேன்களில் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது என்பது ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படிங்க;-  டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

இனி இது போன்ற பால் திருட்டு நடைபெறாதவாறு அனைத்து ஆவின் பண்ணைகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் வருகைப் பதிவை தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் லிட்டர் பால் திருட்டில் ஈடுபட்டோர் மற்றும் அவர்களின் தொடர்புகள் ஆகியவற்றை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

click me!