
எப்பேற்பட்ட கேடுகெட்ட பண வெறி பிடித்த தி.மு.க மூடர்கள் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர் என்பதை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழகம் வருங்காலத்தில் வாழ தகுதியற்ற இடமாக மாறி விடும் என எஸ்.ஜி.சூர்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வணக்கன்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் உரிய அனுமதி இன்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இரண்டு போலீசார் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, கள்ளத்தனமாக மதுவிற்ற பரிமளம் என்பவரை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர்.
இதையும் படிங்க;- நுரையீரல் அழுகி செத்தவங்க குடும்பம் மூலம் கிடைக்குற காசுல தான் அரசே இயங்குதுனு சொல்ல வெட்கபடணும்.. வேல்முருகன்
அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக நிர்வாகி மதியழகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து போலீசாரை வழிமறித்து தனக்கு அமைச்சர் வரை செல்வாக்கு உள்ளதாக கூறி போலீசாரை மிரட்டினார். போலீசார் பிடித்து வைத்த பரிமளத்தை விடுவிக்க முயன்றார். மேலும், தனிப்படை போலீசாரை ஆபாசமாக பேசி செருப்பை எடுத்து மதியழகன் அடிக்கபாய்ந்தார். இதனை போலீசார் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க;- அமைச்சர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தானை நீக்குங்கள்- திமுக அரசுக்கு எதிராக சீறும் எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கள்ள சரக்கு விற்கும் மதியழகன் எனும் தி.மு.க பொறுக்கி அமைச்சர் பெயரை சொல்லி காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறான், செருப்பை எடுத்து காவல் அதிகாரியை அடிக்கிறான். இந்த லட்சணத்தில் கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு, கூச்சமின்றி ஊருக்கு உபதேசம் சொல்ல வெட்கமாக இல்லையா தமிழக முதல்வரே திரு மு.க.ஸ்டாலின்? இந்த தி.மு.க பொறுக்கி மீது நடவடிக்கை எடுக்க திராணி இருக்கிறதா தமிழ்நாடு முதல்வருக்கு?
இதையும் படிங்க;- 500 டாஸ்மார்க் கடையை மூடுவதாக கூறிவிட்டு 5,000 கடையை திறக்க திமுக திட்டம்.? இறங்கி அடிக்கும் ஆர்பி.உதயகுமார்
எப்பேற்பட்ட கேடுகெட்ட பண வெறி பிடித்த தி.மு.க மூடர்கள் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர் என்பதை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழகம் வருங்காலத்தில் வாழ தகுதியற்ற இடமாக மாறி விடும். இதுபோன்ற கேடுகெட்ட பொறுக்கி தி.மு.க ரவுடி கும்பலுக்கு சேவகம் செய்வதை தமிழக காவல்துறை தயவு செய்து விட்டுவிட்டு, மக்கள் பக்கம் நிற்க வேண்டும். வரலாறு பார்த்திடாத அதர்மத்துக்கு துணை போய் தூக்கத்தை இழக்காதீர்கள் என எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.