தமிழகத்தில் 24 மணி நேரமும் மது,கஞ்சா கிடைக்கும்.. ஸ்டாலின் பிளான் இதுதான் - திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி

By Raghupati RFirst Published Sep 23, 2022, 3:35 PM IST
Highlights

ஆ. ராசாவை வைத்து ஸ்டாலின் மோசமான அரசியல் நடத்தி வருகிறார். ஒன்றரை வருடத்தில் தமிழ்நாடு மிகவும் மோசமான நிலைக்கு போய்விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ' திமுக ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த உடனே சொத்து வரியை பல மடங்கு உயர்த்தினர்.

மேலும் செய்திகளுக்கு..“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு

தற்போது மின்கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி விட்டனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றங்கள் அதிகரித்து சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. சமீபத்தில் திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று கூறியதை பல்வேறு அமைப்புகள் தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், திமுக ஆட்சியின் முதல்வர் ஸ்டாலின் மட்டும் ராசாவை வைத்து ஒரு இழிவான அரசியல் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு , வழிப்பறி, 24 மணி நேரமும் மது, கஞ்சா விற்பனை, பள்ளி , கல்லூரி மாணவர்கள் குடித்து சீரழிந்து போகிறது. தற்போது தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் மாத்திரை தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், இதனால் தரம் அற்ற மாத்திரைகள் தரக்கூடிய நிறுவனங்களிடம் கமிஷனுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..“காந்தி ஜெயந்தி அப்போ RSS பேரணியா? தமிழக மண்ணில் பேராபத்து?” கொந்தளிக்கும் சீமான்!

மேலும் பேசிய அவர், 'திமுகவை அழிக்க வேண்டும் என்று தான் அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் திமுகவோடு சேர்ந்து குழப்பம் ஏற்படுத்த முயன்றார். இதனால் ஒற்றை தலைமை வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு ஆவார்' என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!

click me!