உங்களுக்கு அங்கவஸ்த்திரம், எங்களுக்கு கோவணமா.? CBSE பாடத்தில் சூத்தரப் பட்டம்: பாஜகவை தோலுரித்த ராஜீவ் காந்தி

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2022, 3:06 PM IST
Highlights

சிபிஎஸ்இ பாடத்தில், ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "நான்கு வர்ண கோட்பாடு" குறித்த பாடம்  இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் சாதி பேதம் இல்லை என பாஜகவினர் மல்லுக்கட்டி வரும் நிலையில், இதை ஆதாரத்துடன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சிபிஎஸ்இ பாடத்தில், ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "நான்கு வர்ண கோட்பாடு" குறித்த பாடம்  இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் சாதி பேதம் இல்லை என பாஜகவினர் மல்லுக்கட்டி வரும் நிலையில், இதை ஆதாரத்துடன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பாடத்தில் பிராமணர்கள் அங்கவஸ்திரம் அணிந்திருப்பது போலவும் ஆனால் நான்காவது வரிசையில் உள்ள சூத்திரர்கள் வெறும் கோமணத் துண்டு அணிந்துருப்பது போலவும் படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்து இயக்கங்கள் அதிகார மையங்களாக மாறியுள்ளன. இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாடு முழுவதும் இந்துத்துவத்தை, சனாதன கோட்பாட்டை மக்கள் மயமாக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தியா இந்துக்களின் நாடு என்றும், ஒரே மொழி,  ஒரே நாடு,  ஒரே ரேஷன் கார்டு, ஒரே மதம் என்ற  இலக்கை நோக்கி பாஜக அரசு பயணிப்பதாக விமர்சனங்களில் இருந்து வருகிறது.

அதேநேரத்தில், மனு தர்மத்தையும், இந்துத்துவத்தையும் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் திராவிட இயக்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது. திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜகவின் ஹிந்துத்துவா ஆட்சிக்கு எதிராக திராவிட மாடல் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:  “காந்தி ஜெயந்தி அப்போ RSS பேரணியா? தமிழக மண்ணில் பேராபத்து?” கொந்தளிக்கும் சீமான்!

இந்நிலையில்தான் திமுக எம்பிக்கள் ஆ ராசா, தரும்புரி செந்தில்குமார் போன்றோர் தொடர்ந்து இந்துத்துவத்திற்கு எதிராக பேசி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா. இந்து மதம் மனிதனை வர்ணமாக பிரிக்கிறது, சாதியின் ஊற்றுக்கண் இந்து மதம்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் சில கருத்துக்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.

அப்போது மனுதர்மம் பற்றி  தந்தை பெரியார் கூறியதாக,  நீ இந்து என்றால் சூத்திரம் தான், நீ இந்து என்றால் தீண்டத்தகாதவன்தான், நீ இந்து என்றால் பஞ்சமன்தான், சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளைகள் என்று பொருள் என கூறுகிறது, அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதாவது மனுதர்மம் இப்படி வர்ணபேதம் கற்பித்து, இந்துக்க்களை இழிவுபடுத்துவதாக அவரின் பேச்சு இருந்தது 

இதையும் படியுங்கள்: சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு போக்கு.. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஓங்கி அடிக்கும் ஜவாஹிருல்லா.!

ஆனால் இது பாஜகவினரை கொந்தளிப்படைய வைத்துள்ளது. ஆ. ராசா இந்துக்களை அவமரியாதை செய்து விட்டார் என பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்,  அதற்கு, மனுதர்மம் சொல்லியிருப்பதை தான் நான் சொன்னேன், இதில் என்ன தவறு இருக்கிறது என  ராசாவும் பதிலுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ஆனாலும் பாஜகவினர் ஆ. ராசா இந்துக்களை வேசி என கூறிவிட்டார் எனக்கூறி, போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்து மதத்தில் எந்த சாதி பேதமும் இல்லை, ஆ.ராசா சொல்வதுபோல வர்ண பேதமும் இல்லை என்ன பாஜக தலைவர் எச். ராஜா அண்ணாமலை போன்றோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் மத்திய அரசின் பாடப்புத்தகம்மான, Central Board syllabus 6th standard ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், மனிதர்களை நான்கு வர்ணமாக, பிரிவாக பிரிக்கும், "வர்ணக் கோட்பாடு"  பாடமாக இடம்பெற்றுள்ளது. அதை ஆதாரத்துடன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வர்ண கோட்பாட்டில், முதல் தட்டில் பிராமணர்களும்,  இரண்டாவது வரிசையில் ஷத்ரியர்களும்,  மூன்றாவது வரிசையில் வைசியர்களும்,  நான்காவது வரிசையில் சூத்திரர்களும் இருப்பதாக  புகைப்படம் அமைந்துள்ளது.

பிராமணர்கள் அங்கவஸ்திரம் அணிந்து தோளில் துண்டு போட்டு இருப்பதுபோலவும்,  அதே நான்காவது வரிசையில் உள்ள சூத்திரர்கள் கோவணத் துண்டு மட்டும் கட்டி இருப்பது போன்றும் அந்த பாடத்தின் புகைப்படம் அமைந்துள்ளது. இந்து மதத்தில் வர்ண பேதம் இல்லை, சாதிப்பிரிவை இந்துமதம் போதிக்கவில்லை என பாஜகவினர் கூப்பாடு போட்டு வரும் நிலையில்,  மத்திய அரசின் பாட புத்தகத்திலேயே மாணவர்களுக்கு சாதியை போதிக்கும், வர்ண பேதத்தை பாடமாக வைத்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. 

 

central board syllabus 6 std..Mr.

அதில் பாருங்க உங்க தாத்தாவுக்கும் என் தாத்தாவுக்கு வெறும் கோவணம் தான் மிச்சம்…ஆனால் தாத்தாவுக்கும் சு.சாமி தாத்தாவுக்கும் அங்கவஸ்திரம்,தோளில் துண்டு எல்லாம் உண்டு!

கொஞ்சம் என்னனு கேளுங்க மலை அண்ணாமலை!!! pic.twitter.com/Dr92VCA7Ro

— R.Rajiv Gandhi (@rajiv_dmk)

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை அவர்களே இதை பாருங்கள் உங்கள் தாத்தாவுக்கும் என் தாத்தாவுக்கும் வெறும் கோமணம் தான் மிச்சம், ஆனால் எச். ராஜாவின் தாத்தாவுக்கும், சு. சாமியின் தாத்தாவுக்கும் அங்கவஸ்திரம், தோளில் துண்டு எல்லாம் உண்டு. கொஞ்சம் என்னன்னு கேளுங்க மலை, அண்ணாமலை... என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவு மற்றும் பாடப்புத்தக ஆதாரம் பாஜகவினரை நிலைகுலையச் செய்துள்ளது. வெளியில் சாதி இல்லை மதம் இல்லை என பேசுபவர்கள், பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் சாதி பேதத்தை மாணவர்களுக்கு புகட்டும் நோக்கோடு வர்ணபேத பாடத்தை மத்திய அரசின் பாடப்பிரிவில் இடம்பெறச் செய்திருப்பது பெரும்  அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!