ஜனவரி 9 ஆம் தேதி அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம்... ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.. அதிமுக அதிரடி சரவெடி

Published : Dec 21, 2020, 03:37 PM IST
ஜனவரி 9 ஆம் தேதி அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம்... ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு.. அதிமுக அதிரடி சரவெடி

சுருக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 9-1-2021 சனிக்கிழமை காலை  8:50 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் திரு.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.  

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 9-1- 2021  அன்று நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 9-1-2021 சனிக்கிழமை காலை  8:50 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழக அவைத்தலைவர் திரு.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும். 

உறுப்பினர்கள் அனைவரும் covid-19 பரிசோதனை செய்து அதனை சான்றிதழுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு அறிவித் திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் சமூக இடைவெளியை கடைப்பிடித்த முகக்கவசம் அணிந்து தங்களுக்குரிய அழைப் பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம். இப்படிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!