முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தல் நடத்த அதிமுக அதிரடி கோரிக்கை... திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Dec 21, 2020, 3:27 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளனர்.

முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு திமுக கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன்;- தமிழக சட்டப்பேரவை தேர்தலை  முன்கூட்டியே நடத்த அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஏப்ரல் 3 அல்லது 4வது வாரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். 500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்க வேண்டும். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தேர்தலுக்காக ரூ.2500 தரப்படவில்லை. கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வழங்கப்படுகிறது என்றார். 

click me!