அமித்ஷாவையே அதிர வைத்த பாஜக எம்.பி.,யின் மனைவி... செம்ம ட்விஸ்ட் வைத்த மம்தா பானர்ஜி..!

By Thiraviaraj RMFirst Published Dec 21, 2020, 2:52 PM IST
Highlights

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த எம்.பி, ஒருவரின் மனைவி பாஜகவில் இருந்து மம்தா கட்சிக்கு தாவியுள்ளது ட்விஸ்டாக அமைந்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்க திடீர் திருப்பமாக பாஜகவை சேர்ந்த எம்.பி., செளமித்ரா கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான் மம்தா பானர்ஜி கட்சியில் இணைந்துள்ளார். 

இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருவது அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ள பாஜகவுக்கு புதிய தெம்பை கொடுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் முதலில் அவர் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.

பின்னர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி கட்சியில் இருந்தும் விலகினார். கட்சியிலும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் மிகவும் செல்வாக்கு மிக்க சுவேந்து அதிகாரி பதவி விலகி உள்ளது மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. பின்னர் மாநில எம்.எல்.ஏ., ஜிதேந்திர திவாரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அடுத்து எம்.எல்.ஏ., சில்பத்ரா தத்தாவும் கட்சியில் இருந்து விலகினார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

கூட்டணி குறித்தும், பிரசார திட்டங்கள் குறித்தும் முடிவெடுக்க வேண்டிய இந்நேரத்தில் மம்தா பானர்ஜியுடனும்,கருத்து வேறுபாடு காரணமாக எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட அளவிலான கட்சி தலைவர்கள் பதவி விலகி வருவது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகி வருவது மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அதற்கு நேர்மாறாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பாஜகவை சேர்ந்த எம்.பி. செளமித்ரா கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான் இன்று கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். செளமித்ரா கான், மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான செளமித்ரா கானின் மனைவி,  சுஜாதா மொண்டல் கான் இது குறித்து கூறுகையில், ’’பாஜகவில் பெண்கள் மீது மரியாதை இல்லை. அதனால்தான் அவர் பாஜகவில் இருந்து பிரிந்து பானர்ஜியின் அணியில் சேர முடிவு செய்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் சுவேந்து அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்னும் வெகுபல பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த எம்.பி, ஒருவரின் மனைவி பாஜகவில் இருந்து மம்தா கட்சிக்கு தாவியுள்ளது ட்விஸ்டாக அமைந்துள்ளது. 

click me!