நாகர்கோவிலில் பயங்கரம்... முக்கிய சாலையில் எரிந்த நிலையில் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை.

Published : Dec 21, 2020, 03:19 PM ISTUpdated : Dec 21, 2020, 03:20 PM IST
நாகர்கோவிலில் பயங்கரம்... முக்கிய சாலையில் எரிந்த நிலையில் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை.

சுருக்கம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர், பத்தாண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கிவிட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூலித் தொழிலாளியின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது இது கொலையா தற்கொலையா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர், கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர், பத்தாண்டுகளாக வீட்டிற்கு செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கிவிட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காலை சந்திரனின் சடலம் பாதி தீப்பிடித்து எரிந்த நிலையில் நாகர்கோயில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.  

சடலத்தை கைப்பற்றிய போலீசார், இவரை யாராவது கொலை செய்து இருக்கலாம் அல்லது விரக்தியில் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மரணம் அடைந்த அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. நாகர்கோவில் நகரின் முக்கிய சாலை சந்திப்பில் கூலித் தொழிலாளி தீப்பிடித்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!