அமைதியான போராட்டத்தில் திமுக அரசின் அடக்குமுறை.. விடியா அரசே! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

By Raghupati R  |  First Published Jul 4, 2022, 3:52 PM IST

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது, தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. 


மதுரை திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் கேட்பது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கடந்த 2 ஆண்டுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. 

Tap to resize

Latest Videos

இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம் தெரிவித்து இருந்தார். சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார். இதை தொடர்ந்து இன்று காலை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சுங்கச்சாவடியை அகற்றக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?

போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பந்தல் அமைக்க அனுமதி அளிக்காததால் தொண்டர்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

ஆர்.பி உதயகுமார் கைது

போராட்டத்தை கைவிடாததால் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை கைது செய்ய முற்பட்ட போது, தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றினர். அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த மதுரை கப்பலூர் சுங்க சாவடி தற்போது அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக செயல்பட்டுவருகிறது.

கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த மதுரை கப்பலூர் சுங்க சாவடி தற்போது அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக செயல்பட்டுவரும் நிலையில் அதனை அகற்ற கோரி,அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், 1/2

— Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

அதனை அகற்ற கோரி,அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர்,திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு‌. ஆர்.பி. உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன். திரு.உதயகுமார் அவர்களிடத்தில் திமுக அரசின் அடக்குமுறை செயல்கள் குறித்து தொலைபேசியில் விசாரித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

click me!