பாவம் அவங்க.. எப்போ ஜெயிப்பாங்களோ? ஓபிஎஸ் தரப்பை கிழித்த திண்டுக்கல் சீனிவாசன்

Published : Jul 15, 2022, 08:11 PM IST
பாவம் அவங்க.. எப்போ ஜெயிப்பாங்களோ? ஓபிஎஸ் தரப்பை கிழித்த திண்டுக்கல் சீனிவாசன்

சுருக்கம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவினரை அண்மையில் அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், ‘கடந்த 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற நாளன்று, அதிமுக தலைமையகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அராஜகத்தை அரங்கேற்றினார். 

அதிமுக தலைமையகத்திற்கு பாதுகாப்பு கேட்ட நிரபராதிகள் 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதிமுகவின் வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் செய்ய கூடாது என்று வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் அளித்துள்ளார்.சட்டம் என்னவோ அதன் வேலையை செய்யும். நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் ஓபிஎஸ் தொடர்ந்து ஒவ்வொன்றாக தோல்வியை சந்தித்து வருகிறார். இபிஎஸ் வெற்றி பெற்று வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?

நாங்கள் இதிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. அதிமுகவில் தற்போது நாடகம் நடந்து வருகிறது. விரைவில் முடிந்து விடும். 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்ட செயலாளர்களை தவிர்த்து பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் உள்ளனர். தர்மத்தின் விதிப்படி அனைத்தும் நன்றாக நடந்து தர்மம் வெல்லும். 

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சட்டப்படி தேர்வாகி நிரந்தர பொதுச் செயலாளர் ஆவார். அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கல் எரிந்தது யார், அரிவாளால் வெட்டியது யார் என வீடியோ ஆதாரங்கள் உள்ளது. யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!