’4 சீட் கொடுங்க போதும்...’ வேறு வழியே இல்லாததால் அதிமுகவிடம் கூனி குறுகி இறங்கி வந்த தேமுதிக..!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2019, 1:30 PM IST
Highlights

திமுக கதவடைத்து விட்டு விட்டதால் வேறு வழியே இல்லாமல் 4 தொகுதிகளை பெற்றுக்கொள்ள தேமுதிக சம்மதித்து இறங்கி வந்துள்ளதாகவும், நாளையோ, அல்லது மறுநாளோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 
 

திமுக கதவடைத்து விட்டு விட்டதால் வேறு வழியே இல்லாமல் 4 தொகுதிகளை பெற்றுக்கொள்ள தேமுதிக சம்மதித்து இறங்கி வந்துள்ளதாகவும், நாளையோ, அல்லது மறுநாளோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

கூட்டணியை இறுதி செய்து முடித்து விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டே திமுகவுக்கும் தூது விட்டது அம்பலமாகி விட்டது. இது பாஜக, அதிமுக இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தேமுதிகவிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. அதுவரை அதிமுகவிடம் பேரம்பேசி கூட்டணிக்காக மிரட்டி வந்த தேமுதிக இப்போது பணிந்து இறங்கி வந்துள்ளது. பாமகவுக்கு இணையாக சீட் கேட்டு இழுத்தடித்து வந்த தேமுதிகவின் நடவடிக்கைகள் அதிமுகவை அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும், தேமுதிக கூட்டணிக்கு வேண்டும் பாஜக அடம்பிடித்து வந்தது. ஆனாலும் பாஜகவும் இப்போது தேமுதிக மீது கடும் ஆத்திரத்தில் உள்ளது. 

இந்நிலையில் அதிமுக தேமுதிகவுக்கு கெடு விதித்துள்ளது. ’’முன்பே சொன்னபடி 4 சீட்டுகள் தருகிறோம், வாங்கி கொள்ளுங்கள், தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் அறிவித்து விடுவார்கள். அதனால் இன்றோ, நாளையோ ஒருமுடிவுக்கு வாருங்கள் இதற்கு மேல் உங்களுக்காக காத்திருக்க முடியாது’’ கறாராக கூறிவிட்டது அதிமுக.

அதிமுக கூட்டணியை விட்டால் வேறு வழியே இல்லை. தனித்து நின்றாலும் ஒரு சதவிகித வாக்குகள் கிடைக்காமா? என்பதே சந்தேகம். இப்படியே போனால் அதிமுகவினர் நமது கட்சியை கூட்டணியில் இருந்து ஒதுக்கி விட வாய்ப்புகள் அதிகம். ஆகையால் 4 நீங்கள் கொடுக்கும் 4 சீட்டுகளே போதும் என தேமுதிக இறங்கி வந்துள்ளது. அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக தேமுதிக அறிவிக்க உள்ளது. 

தேமுதிக பிடிவாதம் காட்டி, கூட்டணியை மிரட்டி, திமுகவிடம் பேரம் பேசியது அம்பலமாகி விட்டதால் அதிமுக கூட்டணியில் ஸ்டார் கூட்டணியாக வரவேண்டிய தேமுதிக இனி கூனிக்குறுகி ஒட்டிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. 

click me!