2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!

By Raghupati RFirst Published Jan 7, 2023, 3:42 PM IST
Highlights

பாதிக்கப்பட்ட பெண் காவலரிடமே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கடிதம் வாங்கியது குறித்து திருமாவளவன், முதல்வரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

சென்னையில் தமிழக பாஜக கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகர் - நடிகைகளுக்கு விருதுகளை வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை. அப்போது,  விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் போலீஸாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..தமிழ்நாட்டை காப்பாற்ற ராமேஸ்வரத்தில் மோடி.. கோவையில் அமித்ஷா.! 2024 தேர்தல் - அர்ஜுன் சம்பத் அதிரடி

சம்பந்தப்பட்ட பெண் காவலரிடமும் நடவடிக்கை வேண்டாம் என கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் எங்கும் நடக்காது. பாதிக்கப்பட்ட பெண் காவலரிடமே நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கடிதம் வாங்கியது குறித்து திருமாவளவன், முதல்வரிடம் கேள்வி எழுப்ப வேண்டும். பெண் காவலருக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கான நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது பாஜக - அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன்தான் கூட்டணி. இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழக பாஜக மிகவும் தெளிவாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு ஆகும்.

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா ? என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா ? என்பது குறித்து தெரியவில்லை. தொண்டர்கள் அனைவருக்கும் பிரதமர் தனது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே விருப்பம்.

ஆனால் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவருமே பிரதமர் மோடியைப் போன்றவர்கள். அவரது ஆசியைப் பெற்றவர்கள் தான். வரப்போகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழக பாஜக மற்றும் சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கு மைல்கல்லாக இருக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க..ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

click me!