எங்கள் தொகுதிக்கு முதல்வர் வந்தால் மக்கள் செருப்பை வீசுவார்கள்.. சுயேச்சை MLA பேச்சுக்கு NR.காங்கிரஸ் கண்டனம்

Published : Jan 07, 2023, 02:23 PM IST
 எங்கள் தொகுதிக்கு முதல்வர் வந்தால் மக்கள் செருப்பை வீசுவார்கள்.. சுயேச்சை MLA பேச்சுக்கு NR.காங்கிரஸ் கண்டனம்

சுருக்கம்

புதுச்சேரி ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி அசோக் அவர்கள் நேற்று தினம் ஏனாத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மீது துஷ்பிரயோகம் செய்து நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பதை அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

புதுச்சேரி முதல்வர் ஏனாம் தொகுதிக்கு வந்தால் மக்கள் செருப்பு வீசுவார்கள் என அந்த தொகுதியின் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. பேசியதற்கு, என்.ஆர். காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- புதுச்சேரி ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி அசோக் அவர்கள் நேற்று தினம் ஏனாத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மீது துஷ்பிரயோகம் செய்து நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பதை அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏனாம் தொகுதி புறக்கணிப்படுகிறது என்ற குற்றச்சாட்டை வைத்து கொல்லப்பள்ளி அசோக் அவர்கள், அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் வரும் 8-ஆம் தேதி ஏனாம் வருகை தரும் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மீது தனது தொகுதி மக்கள் செருப்பை வீசுவார்கள் என்று திமிர்தனமாக பேசியிருப்பது செய்தி தாள்களிலும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது. இது ஏனாம் மக்களிடையே பெரும் கலவரத்தை தூண்டும் வன்மத்தின் உச்சக்கட்டமாக தெரிகிறது.

ஒரு காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருந்த ஏனாமை  முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு ஏனாம் தொகுதிக்கு தாராளமான நிதி கொடுத்து கடந்த 20 ஆண்டுகளில் ஏனாம் தொகுதியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு வித்திட்டவர். மேலும் என்னற்ற பல திட்டங்கள் மூலம் அப்பகுதி ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்வுக்கு பெரும் உதவி புரிந்தவர் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. கடந்த கால வரலாறு கூட தெரியாமல் அறிவும், அனுபவமும் இல்லாமல் கொல்லப்பள்ளி அசோக் அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆணவத்தில் இவ்வாறு பேசியுள்ளதை ஏனாம் மக்கள் உட்பட யாரும் ஏற்கமாட்டார்கள்

இன்றைய புதுச்சேரி அரசியல் நிலவரம் ஆட்சி அதிகாரம், நிதி நிலை ஆதாரம் இவற்றின் நிலைப்பாடு குறித்து கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் ஒரு சில கருத்துக்களை வருத்தத்தோடும் ஆதங்கத்தோடும் வெளிப்படையாக தெரிவித்து வருவதை புதுவை மக்கள் உற்று நோக்கி வரும் சூழ்நிலையில் கொல்லப்பள்ளி அசோக் அவர்கள் தனது தொகுதியின் கோரிக்கைகளை கன்னியத்தோடும், நாகரீகமான முறையில் அறவழியில் கேட்டு போராடி பெறவேண்டுமே தவிர இதுபோல் நாதாரித்தனமாக பேசக்கூடாது.

சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் பணபலத்தால் தேர்வான சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரின் வன்முறையை தூண்டும் இத்தகைய பேச்சுக்கு ஏனாம் காவல்துறை கொல்லப்பள்ளி அசோக் அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனாம் வருகை தரும் முதலமைச்சர் அவர்களை ஏனாம் என். ஆர். காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தொண்டர்கள் ஏனாம் மக்களின் ஆதரவோடு குதுகலமிட்டு ஆரவாரத்தோடு அமோகமாக வரவேற்பார்கள்.

தனி மனித காழ்புணர்ச்சி, வெறுப்பின் காரணமாக மக்கள் முதல்வர் என்.ஆர். அவர்களின் மீது இனி துஷ்பிரயோக வன்முறை பேச்சு தொடர்ந்தால் கொல்லப்பள்ளி அசோக் அவர்கள் புதுச்சேரி வரும்போது என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களாலும், புதுச்சேரி மக்களாலும் சிறைபிடிக்கப்பட்டு அவர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரி முதல்வரை அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் சுயேட்சை எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமி பற்றி எம்எல்ஏ அவமரியாதையாக பேசியிருந்தால் கண்டனத்திற்குரியது எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!