சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன். சசிகலாவின் தொழில் அனைத்தையும் கவனித்து வருகிறார். விவேக்கின் மாமனார், அண்ணா நகரில் வசித்து வருபவர் பாஸ்கர்(எ) கட்டை பாஸ்கர்.
செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன். சசிகலாவின் தொழில் அனைத்தையும் கவனித்து வருகிறார். விவேக்கின் மாமனார், அண்ணா நகரில் வசித்து வருபவர் பாஸ்கர்(எ) கட்டை பாஸ்கர். இவர் மீது செம்மரம் கடத்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், செம்மரக்கட்டை கடத்தலை மறைப்பதற்காக, பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வந்தார். அப்போது, பர்னிச்சர் கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது 48 கோடி செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கர் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார்.