தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் விஜய்.. அவரது டான்ச அடிச்சுக்க இந்தியாவிலேயே ஆள் இல்லை.. சீமான் புகழாரம்..!

Published : Jan 07, 2023, 08:50 AM ISTUpdated : Jan 07, 2023, 08:53 AM IST
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் விஜய்.. அவரது டான்ச அடிச்சுக்க இந்தியாவிலேயே ஆள் இல்லை.. சீமான் புகழாரம்..!

சுருக்கம்

 தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விஜய் இருக்கிறார் என சீமான் கூறியுள்ளது ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய் போன்று நடனமாடுவதற்கு இந்தியாவிலேயே நடிகர் கிடையாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். 

சென்னை சத்யா மெட்ரிகுலேசன் பள்ளியில் இயக்குநர் கீரா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் எம்ஜிஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு உள்ளிட்டோர் இரும்பன் திரைப்படத்தில் நடத்துள்ளனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய சீமான்;- நடிகர் விஜய் நடிக்க வருவதற்கு அவரது அப்பா எஸ்ஏசி (சந்திரசேகர்) உதவி இருப்பார். ஆனால், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக தம்பி விஜய் இருக்கின்றார் என்றால்  அவருடைய உழைப்புதான் காரணம். அவரது நடனம் மிக அருமையானது. விஜய் போன்று நடனமாடுவதற்கு இந்தியாவிலேயே நடிகர் கிடையாது. 

இதையும் படிங்க;- துணிவை விட ரூ.100 கோடி அதிக கலெக்‌ஷன்... ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடிய வாரிசு - முழு விவரம் இதோ

அதுபோலத்தான் நடிகர் தனுஷ். அவர் நடிக்க வருவதற்கு அவரது அப்பா கஸ்தூரிராஜா உதவி இருக்கலாம். ஆனால் தனுஷ், தன்னுடைய உழைப்பால் தற்போது உயர்ந்து நிற்கிறார். ஆகவே தாத்தா எம்ஜிஆர் பெயரை பேரன் காப்பாற்ற வேண்டாம். கெடுக்காமல் இருக்க வேண்டும். ஆகவே, ஜூனியர் எம்ஜிஆர் நன்றாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும் என சீமான் பேசியுள்ளார். 

முன்னதாக ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றும், விஜய்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றும் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது வீட்டுக்குச் சென்ற ரஜினி ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விஜய் இருக்கிறார் என சீமான் கூறியுள்ளது ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரம் இல்லை..! உச்சத்தில் நடிகர் விஜய்.!! ரஜினி ரசிகர்களை சீண்டிய சீமான்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்