ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த ட்விஸ்ட்!

By Raghupati R  |  First Published Jan 21, 2023, 8:59 PM IST

ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக இருக்குமா ? அல்லது பாஜக தனித்து போட்டியிடுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக, காங்கிரஸ்,பாஜக ஆகிய கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.   திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது.

ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில  காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.  இப்போதும் அந்த கட்சியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக போட்டியிட விரும்புவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Latest Videos


இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக போட்டியிடும் என்ற முடிவை தாங்கள் ஏற்பதாகவும், கூட்டணி தர்மத்தை மதித்து தாங்கள் முழு ஆதரவையும் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று அதிமுகவின் இரண்டு அணிகளான எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறி மாறி இன்று கமலாலயம் வந்து ஆலோசனை நடத்தினார்கள்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்

இதையும் படிங்க..மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

click me!