அதிமுகவின் நிலையை நிரூபிக்க இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பு - விஜயபாஸ்கர் பேச்சு

By Velmurugan s  |  First Published Jan 21, 2023, 3:04 PM IST

அதிமுக எப்பேர்ப்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஒரு வாயப்பு என்று கரூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. கரூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பேசும் போது, கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்தும், 30 ஆண்டுகள் ஆண்ட இயக்கம் அதிமுக பல சோதனைகளை கடந்து 1 கோடியே 54 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கம். எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு கட்சி இரண்டாக உடைந்தது. தலைவருக்குப் பிறகு அம்மா கட்டி காத்து எஃக்கு கோடையாக மாற்றினார்.

Tap to resize

Latest Videos

undefined

திண்டுக்கல்லில் வளர்ப்பு நாயை நாய் என்று அழைத்த முதியவர் குத்தி கொலை

மைனாரிட்டி அரசு என்றால் அது திமுக தான். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது அதிமுக. ஒவ்வொரு முறையும் பொய் சொல்லி தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பீனிக்ஸ் பறவை போல் மீண்டும், மீண்டும் எழுந்த இயக்கம் அதிமுக. அம்மாவின் அரசை தொடர்ந்து எடப்பாடியார் வழி நடத்தி 78 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது இருக்கிறார்கள் என்றால் அதுதான் அதிமுக. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது கருணாநிதி குழந்தைகளை தட்டு எந்த வைத்து விட்டார் என விமர்சித்தார்.
 
நம்மிடம் இருந்து போன துரோகிகள் போகாமல் இருந்தால் மூன்றாவது முறையாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும், ஈரோடு மாவட்ட இடைத்தேர்தலில் அதிமுக எப்பேர்பட்ட இயக்கம் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தான் இப்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல்.

10 ஆண்டு குடும்ப வாழ்க்கை ஆனால், திருமணம் செய்ய மறுக்கிறார்; மதபோதகர் மீது பெண் புகார்

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் பேசும் போது கருணாநிதி பக்தன் என்று சொல்கிறார். இப்போது அவரை இயக்குவது திமுக தான். ஓபிஎஸ் மகன் எம்பி ஆகின்றார் அவர் ஸ்டாலினை பார்த்து சொல்கிறார் நல்லாட்சி நடத்துகின்றார்கள் என்று கூறுகின்றார். அப்போது எப்படி அதிமுக நிர்வாகி என்று சொல்லலாம், 24 மணி நேரம் மருத்துவமனை இருக்கின்றது அந்த மாதிரி இந்திய துணை கண்டத்தில் 24 மணி நேரமும் சாராய விற்பனை செய்யும் முறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான் கோவலன் என்று ஒருவர் இருந்தார் தப்படித்துக் கொண்டு இருப்பார் இப்போது அவர் எங்கு போனார் என்று கூட தெரியவில்லை என்று கூறினார்.

click me!