அதிமுக கூட்டணியில் சிறு கட்சிகளுக்கு இதயத்தில் இடம்... அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்...!

Published : Mar 10, 2021, 09:17 AM IST
அதிமுக கூட்டணியில் சிறு கட்சிகளுக்கு இதயத்தில் இடம்... அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்...!

சுருக்கம்

அதிமுக கூட்டணியில் சீட்டு கேட்ட சிறு கட்சிகளை அதிமுக ஆதரவு கட்சிகள் என்று அறிவிப்பு செய்து, இந்தக் கட்சிகளை கலங்கடித்துள்ளது அதிமுக தலைமை.  

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியது. தேமுதிகவுக்கு 13 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில், அதை ஏற்காத தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது. 12 தொகுதிகளைக் கேட்ட தமாகாவுக்கு 3 முதல் 5 தொகுதிகள் தரப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்சிகளைத் தவிர்த்து பல சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம் பெற தொகுதிகள் கேட்டு ஆளாய் பறக்கின்றன. 
கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி 2 தொகுதிகள், நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி 5 தொகுதிகள், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான்பாண்டியன் 5 தொகுதிகள், புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன் மூர்த்தி 3 தொகுதிகள், தமிழ் மாநில முஸ்லீம் லீக்கின்  ஷேக் தாவூத் 3 தொகுதிகள், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தனபாலன் 5 தொகுதிகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் 9 தொகுதிகள், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி 3 தொகுதிகள் கேட்டு அதிமுகவை அணுகியுள்ளன.
ஆனால், இந்தக் கட்சிகளை அதிமுக தலைமை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக நிறுத்தியுள்ளது. இக்கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரம் ஒதுக்குவதில்லை. அதிமுக பேச்சுவார்த்தை குழுவும் இந்த சிறுகட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கருணாஸ், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 
இந்நிலையில் தொகுதி பங்கீடு கேட்ட இந்த சிறு கட்சிகளை ‘அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள்’ என்ற பெயரில் அறிவிப்பை வெளியிட்டு, சிறு கட்சிகள் அனைத்துக்கும் அதிமுக தலைமை அதிர்ச்சி கொடுத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு