எந்தெந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார்...? விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்ட ஈபிஎஸ் - ஓபிஎஸ்..!

By Asianet TamilFirst Published Mar 10, 2021, 8:14 AM IST
Highlights

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ள நிலையில், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு பற்றி விடிய விடிய இபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் மற்ற சிறு கட்சிகள் போட்டியிடும் விவரங்கள் அதிமுகவில் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே முதல் கட்டமாக 6 வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக அறிவித்துள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், எஞ்சிய வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட அதிமுக முடிவாகியுள்ளது.
ஆனால், வேட்பாளர் தேர்வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து வேறுபாடு என்ற தகவல்கள் வெளியாகின. தங்கள் ஆதரவாளர்களை நிறுத்த இருவருமே முயற்சிப்பதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் வேட்பாளர் தேர்வு பற்றி நேற்று இரவு ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை விடியவிடிய நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உடன் இருந்தார்கள்.


இந்த ஆலோசனையில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி இருவரும் ஆலோசித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக போட்டியிடும் தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இக்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்று இரவு முடிவாகின.

click me!