2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி !! முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு !

By Selvanayagam PFirst Published Dec 21, 2019, 8:10 PM IST
Highlights

மகாராஷ்ட்ராவில் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
 

மகாராஷ்ட்ராவில்  தேர்தல் பிரச்சாரத்தின் போது , சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்ரே அறிவித்து இருந்தார். 

தற்போது, காங்கிரஸ்,  தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள உத்தவ் தாக்ரே, இன்று சட்டப்பேரவையில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். 

இது தொடர்பாக சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர்,  "விவசாயிகள் வங்கியில் 2019, செப்டம்பர் 30-ம் தேதிவரை ரூ.2 லட்சம் வரை பெற்றிருக்கும் பயிர்க்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்.

இந்த திட்டத்துக்கு மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கும் சிறப்புத் திட்டமும் இருக்கிறது" என்றும் உத்தவ் தாக்ரே அதிரடியாக அறிவித்தார். 

click me!