இந்த அடிமைகளை அல்லாஹ் மன்னிக்க மாட்டார்: முதல்வருக்கு எதிராக சாபம் விடும் ஜவாஹிருல்லாஹ்!

By Vishnu PriyaFirst Published Dec 21, 2019, 5:41 PM IST
Highlights

நடந்திருப்பது மிகப்பெரிய துரோகம். இதற்கு ஒரு இஸ்லாமிய எம்.பி.யும் துணை போயிருப்பதுதான் கொடுமை. என்ன பண்ண, சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஹமது ஜான் எம்.பி.யானவர் எடப்பாடியாரின் அடிமை. அந்த எடப்பாடியாரோ மோடிக்கு அடிமை. அதனால்தான் இப்படியான கூத்துகள் நடக்கின்றன. இவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டார். 

தேசம் முழுக்க கிளர்ந்தெழுந்து நடந்து வரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையில்தான் பிரச்னையை உருவாக்கி இருக்கிறது! என்று பார்த்தார், முஸ்லிம்களுக்கு உள்ளேயுமே ஒரு  எரிமலையை இது கிளப்பியிருப்பதுதான் அதிர்ச்சி.  அதாவது மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவில் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜம்முன்னு நிறைவேறிட மத்திய அரசுக்கு கைகொடுத்தவர்களில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வின் பங்கு அலாதி. இதற்காக இஸ்லாமியர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர் இக்கட்சியினர் இருவரும். அதிலும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்களில் ஒருவரான முஹமது ஜான் எம்.பி.யும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து, தனது மத மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார். 


அதாவது ‘அ.தி.மு.க. எவ்வளவு வேண்டுமானாலும் மத்தியரசிடம் குனிந்து கும்பிடு போட்டுவிட்டு போகட்டும், எங்களுக்கு கவலையில்லை. ஆனால், ஒரு முஸ்லிம் எம்.பி.யை வைத்தே முஸ்லிம்களுக்கு எதிரான மசோதாவை ஆதரிக்க வைத்தது பெரும் குற்றம்.’ என்று கொந்தளிக்த்துக் கொண்டுள்ளனர். எம்.பி. முகம்மது ஜானுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லா...”நடந்திருப்பது மிகப்பெரிய துரோகம். இதற்கு ஒரு இஸ்லாமிய எம்.பி.யும் துணை போயிருப்பதுதான் கொடுமை.  என்ன பண்ண, சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஹமது ஜான் எம்.பி.யானவர் எடப்பாடியாரின் அடிமை. அந்த எடப்பாடியாரோ மோடிக்கு அடிமை. அதனால்தான் இப்படியான கூத்துகள் நடக்கின்றன. இவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டார். 
ராணிப்பேட்டையின் அனைத்து ஜமாத் புரவலராக இந்த முஹமது ஜான் இருந்தார். அந்த பதவியிலிருந்துதான் அவரை நீக்கியுள்ளனரே தவிர, ஜமாத்திலிருந்து நீக்கவில்லை.” என்றிருக்கிறார்.  


முஹமது ஜானின் செயல்பாட்டினை விமர்சிக்கும் தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் “முஹமது ஜான் செய்திருப்பது சமூக துரோகம். இப்படியொரு துரோகத்தினை செய்துவிட்டு, அதன் பிறகும் எம்.பி.யாக நீடிப்பது என்பது அவருக்கு இந்த இஸ்லாமிய சமுதாயத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லை! என்பதை காட்டுகிறது. ஒரு இஸ்லாமியர் என்பதால்தான் இந்த பதவியானது முஹமது ஜானுக்கு கிடைத்தது. அட்லீஸ்ட் அந்த நன்றியையாவது சமுதாயத்துக்கு காட்டியிருக்கலாம். வாக்கெடுப்பு நாளில் அவைக்கு போகாமலாவது இருந்திருக்கலாம். தன் கட்சி தலைமையிடம் வாக்குவாதம் செய்திருக்கலாம். இவை எதையும் செய்யாத முஹமது ஜான், அமைச்சர் நிலோபர் கபில், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா ஆகியோ இஸ்லாம் சமுதாயத்தின் துரோகிகள். இந்த துரோகிகள் நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களை இஸ்லாத்திருந்து  நிராகரிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.” என்று பொங்கியிருக்கிறார். 

click me!