முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31 கமிஷன் அமைத்துள்ளார் என்றும் எந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முடியவில்லை என்றால் உடனடியாக கமிஷன் அமைப்பது தான் முதலமைச்சர் முதல் வேலையாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முதலமைச்சருக்கு காய்ச்சல்
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், அதன் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் பாஜகவை வெல்ல முடியாத கட்சியாக மாறி இருப்பதாக தெரிவித்தார். தற்போது பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக தெரிவித்தார். ஐந்தாண்டு காலம் நம்முடைய உழைப்பு ஊதியமாக தேர்தலில் வென்று கொண்டு வந்திருக்கிறோம் என கூறினார். ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பாஜக சார்பாக திரெளபதி முர்மு அதிக வாக்கு சதவீதம் பெற்று வெல்வார் என தெரிவித்தார். எப்பொழுது குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு பெயரை அறிவித்தோமோ அப்பொழுதே தமிழக முதல்வருக்கு காய்ச்சல் வந்து விட்டதாக தெரிவித்தார்.மோடியை போல் அடித்தட்டு மக்களை நினைத்து அவர்களுக்காக யோசிக்கும் குட்டி மோடியாக வாழ வேண்டும் என்றால் தனி மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே உருவாக முடியும் என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் 15 இடங்கள் உறுதி
தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி மக்கள் கட்சியா ? இல்லை குடும்பம் கட்சியா என்றே தெரிய வில்லை என விமர்சித்தார். எது அரசு எது குடும்பம் என்றே தெரிய வில்லை என கூறினார். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைப்பதாக கூறிய அவர், தற்போது காஞ்சாவின் தலைநகரமாக சென்னை உருவாகிவிட்தாக குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததும் பொய்களைக் கூறி ஆட்சி நடத்தும் அனைவரையும் குஜராத் போல லீபரல் முறையில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.
நான் மூன்றாம் கலைஞரா ? உஷார் ஆன உதயநிதி.. இனி என்னை இப்படி கூப்பிடுங்க போதும்!
31 கமிஷன் அமைத்த முதலமைச்சர்
எந்த பிரச்சனையாக இருந்தாலும் நமது முதலமைச்சர் கடிதம் எழுதுவதாகவும் அவருக்கு கடிதம் முதலமைச்சர் என இன்னொரு பெயர் இருப்பதாக குறிப்பிட்டார். இதே போல தமிழகத்தில் முதலமைச்சர் 31 கமிஷன் அமைத்துள்ளார். எந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முடியவில்லை என்றால் உடனடியாக கமிஷன் அமைப்பது தான் முதலமைச்சர் வேலை என்றும் விமர்சித்தார்.2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தவர், 15 இடங்கள் உறுதியாகிவிட்டதாகவும், இன்னும் 10 இடங்களுக்கு மட்டுமே உழைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
TN 11th Result : இன்று பிளஸ் 1 ரிசல்ட்.. மாணவர்கள் எந்த இணையதளத்தில் முடிவுகளை பார்க்கலாம்..?