Vijayakanth : தொடர் தோல்விகளால் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் என பலரும் பல்வேறு கட்சிகளுக்கு தாவினர்.
தேமுதிக கட்சி
தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) என்கிற புதிய கட்சியை மதுரையில் 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தொடங்கினார். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்காலத்திலேயே 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை அந்தக் கட்சி எதிர்கொண்டது. அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை விஜயகாந்த் களமிறக்கினார். அதில் விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார். வட மாவட்டத்தில் அமைந்துள்ள விருத்தாசலம் தொகுதியில் அவர் வெற்றிபெற்றார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளை தேமுதிக பெற்றது. அடுத்ததாக, 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. தனது வாக்குவங்கியை அந்தக் கட்சி தக்கவைத்துக்கொண்டது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தது. 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார்.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?
தொடர் தோல்வி
பிறகு அதிமுக - தேமுதிக இடையிலான கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது தேமுதிக. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலைச் சந்தித்தது. அதிலும் தே.மு.தி.க தோல்வியடைந்தது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அந்தத் தேர்தலிலும் தேமுதிகவுக்கு தோல்வியே கிடைத்தது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து தேமுதிக போட்டியிட்டது.தொடர் தோல்விகளால் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் என பலரும் பல்வேறு கட்சிகளுக்கு தாவினர்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்
விஜயகாந்தின் உடல்நிலையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக தலைவர் ஆக்கப்படுகிறார் என்றும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் குறித்து வெளிவரும் வதந்திகள் மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும்.
ஒரு சில நிறுவனங்கள் பிரேக்கிங் செய்திகளுக்காக இதுபோன்ற தகவல்களை வெளியிடுகின்றனர். அதிமுக பிரச்சனை உட்கட்சி விவகாரம் அதில் தேமுதிக தலையிட விரும்பவில்லை. தேமுதிகவில் இதுவரை எந்த பதவி எனக்கு வழங்கவில்லை. பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க : நான் மூன்றாம் கலைஞரா ? உஷார் ஆன உதயநிதி.. இனி என்னை இப்படி கூப்பிடுங்க போதும்!