
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு நேரில் ஆதரவு அளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார்.
அதிமுக அம்மா அணி சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைனத் தொடர்ந்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் நிலை என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜனாதிபதி தேர்தலில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு இதிமுக அம்மா அணி ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார். இ
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த்க்கு நேரில் ஆதரவளிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்லவுள்ளார்.