
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக அறிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக அதிமுக அம்மா அணி சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜுலை 25 ஆம் தேதியுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிவசேனா, பகுஜன் சமாஜ் உள்ளிக்க கட்சிகளும், நிதிஷ்குமார் போன்ற தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் யாரை ஆதரிப்பது என முடிவு செய்ய சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.தலைமையில் இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு முழுமன்துடன் ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே நேரத்தில் எதிர்கட்சிகள் சார்பில் நாளை குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். அம்பேத்கரின் பேரன் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.