AIADMK : திமுக ஆட்சி அமைந்து 18 மாசம் ஆச்சு.. எந்த திட்டமும் மக்களுக்கு செல்லவில்லை - ஆர்.பி உதயகுமார் பேச்சு

By Raghupati R  |  First Published Dec 31, 2022, 9:34 PM IST

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று  இந்த 18 மாத ஆட்சி கால நிறைவில், எந்த திட்டத்தையும் இந்த மக்களுக்கு தரவில்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.


மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி. உதயகுமார் இன்று பேசிய போது, தமிழகம் உள்ள அனைத்து கிராமங்களிலும் வாக்குச்சாவடி உள்ளது.

குறிப்பாக இந்த மேற்கு ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி பூத் கமிட்டி நிர்வாகிகள் அம்மா ஆட்சியில் நடைபெற்ற சாதனை திட்டங்களையும், திமுக அவலங்களையும் மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் வழங்கிட வேண்டும். கடந்த ஆண்டில் துன்பங்களை துயரங்களை ஏமாற்றங்களை சந்தித்து இருப்பதை நாம் கவலையோடு எண்ணிப் பார்க்கின்றோம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்று  இந்த 18 மாத ஆட்சி கால நிறைவில், எந்த திட்டத்தையும் இந்த மக்களுக்கு தரவில்லை என்பதுதான் எதார்த்தமான நிலவரமாகும். அம்மா வழங்கி வந்த அந்த மகத்தான திட்டத்தை முடக்கி பல்வேறு காரணங்களை கூறினாலும், அது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது நிறுத்தப்பட்டுள்ளது.

அம்மா  ஏழை எளிய மக்களுக்காக  வழங்கிய தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். அதேபோல் ஓய்வு திட்டத்தை எடுத்துகொண்டால்  2010 வரை திராவிட முன்னேற்றக் கழக அரசு 1, 200 கோடி ரூபாய் வழங்கிவந்தது. புரட்சித்தலைவி அம்மா இத்திட்டத்திற்காக 4, 200 கோடி ஒதுக்கினார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் கூடுதலாக 5 லட்சம் பேருக்கு  முதியோர் ஓய்வூதியம்  வழங்குவதற்காக ஒரே அரசாணை வெளியிட்டார்.

அதை படிப்படியாக குறைத்து வருகின்றனர். அதேபோல் எடப்பாடியார் பாரத பிரதமர் மூலம் தொடங்கப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டனர் என்று குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

click me!