தினகரனை சேர்த்துக் கொள்ளுவோம்! எடப்பாடியை நச்சரிக்கும் எம்.எல்.ஏக்கள்!

By sathish kFirst Published Oct 6, 2018, 10:13 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சேர்ந்து செயல்படுவோம் அதற்கு உரிய பேச்சுவார்த்தையை நடத்துங்கள் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சேர்ந்து செயல்படுவோம் அதற்கு உரிய பேச்சுவார்த்தையை நடத்துங்கள் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.,
   
சசிகலா தரப்புடன் சமாதானமாக செல்ல வேண்டும் என்று அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர் கடந்த இரண்டு மாதங்களாகவே பேச ஆரம்பித்தனர். எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே சில மூத்த நிர்வாகிகள் சின்னம்மாவுடன் சமாதானம் ஆகிவிடுவோம், தினகரனை சேர்த்துக் கொள்வோம் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் தினகரனை – ஓ.பி.எஸ் சந்தித்த நிகழ்வு வெளியாகி அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


   
கோவை மாவட்டம் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ், நேற்று வெளிப்படையாகவே தினகரனுடன் ஓ.பி.எஸ் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது, விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தினகரனை அ.தி.மு.கவில் சேர்க்க வேண்டும் என்று பேட்டி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் நேரடியாகவே தொடர்பு கொண்டு தினகரன் தரப்புடன் பேசுவோம் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
   
ஓ.பி.எஸ் ஏதேனும் விபரீதமாக செய்வதற்கு முன்னதாக தினகரனுடன் சேர்ந்தால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் என்றும் எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடியை நேற்று இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்ததாகவும் கூறப்படுகிறது. சசிகலாவுடன் சமாதானம் ஆகிவிடலாம் ஆனால் தினகரனை எப்படி சேர்த்துக் கொள்வது என்பது தான் எடப்பாடி தற்போது யோசிக்க காரணமாக உள்ளது.


  
இதனிடையே மேலும்சில எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகவே அ.தி.மு.க – அ.ம.மு.க இணைய வேண்டும் என்று பேட்டி கொடுப்பார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் சிலரும் மீண்டும் சின்னம்மா புகழ்பாட தயாராகி வருவதாக தெரிகிறது. இதனை எதிர்பார்த்தே தினகரன் தரப்பும் தற்போது ஓ.பி.எஸ் சந்திப்பு விவகாரத்தை பெரிதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

click me!