பத்திரிகையாளர்களை நாயென விமர்சித்த ஹரிஹரன் - கட்சியை விட்டே தூக்கிய செயலாளர்கள்

Asianet News Tamil  
Published : May 28, 2018, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
பத்திரிகையாளர்களை நாயென விமர்சித்த ஹரிஹரன் - கட்சியை விட்டே தூக்கிய செயலாளர்கள்

சுருக்கம்

admk it wing admin hari pirabaharan dismissed

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் இதனால் அங்கு பெரும் பதட்டம் உருவாகியது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டை செய்தி சேனல்கள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்தன. மக்கள் பலரும் பல நிகழ்வுகளை முக்கியமாக காவல்துறையின் செயல்களை மக்கள் செல்போன் மூலமாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை கட்சித் தலைவர்கள் பலரும் பார்த்து ஆறுதல் கூறி வருகின்றனர். தற்போது இயல்பு நிலை திரும்பியதை ஒட்டி ஆளும் கட்சியான அதிமுக சார்பில் துணைமுதலமைச்சர் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மக்களை சந்தித்தனர்.

இதில் அவர்களுடன் மருத்துவமனைக்குள் செல்ல பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் காயம் பட்டவர்களின் உறவினர்கள் செல்போனில் பதிவு செய்ததையும் மருத்துவர்கள் அதை பறித்து அழித்துவிட்டனர்.

இந்நிலையில் அதிமுகவின் சமூக வலைதள நிர்வாகி ஹரி பிரபாகரன் “ துணைமுதல்வர் சென்ற தூத்துக்குடி மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிஸ்கட்டிற்காக குரைக்கும் நாய்களை கேட்டிற்கு வெளியேதான் கட்டி வைப்பார்கள் உள்ளே விடமாட்டார்கள் “ என மோசமாக கூறியுள்ளார்.

பிரபல செய்தி சேனல்கள் பலவற்றையும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இவர் தனது பதிவை டெலிட் செய்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இவர் தனது பதிவை டெலிட் செய்துள்ளார். ஹரிஹரன் பிரபாகரனை அதிமுகவின் செயலாளர்களான எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மொத்தமாக நீக்கியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மகாராஷ்டிரா துணை முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 5 மணிக்கு பதவியேற்பு... ஒன்றிணையும் NCP..!
விஜய் கையில் காப்பு... ஷோபா நடத்திய ரகசிய யாகம்..! பாபா மந்திரம் பலிக்குமா ..?