இரட்டை குழல் துப்பாக்கியாக ராதாரவி பழ.கருப்பையா! ஓ.பி.எஸ் - இபிஎஸ் போல இணைப்பு விழா! விஜய் பட விறுவிறு...

Asianet News Tamil  
Published : May 28, 2018, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
இரட்டை குழல் துப்பாக்கியாக ராதாரவி பழ.கருப்பையா! ஓ.பி.எஸ் - இபிஎஸ் போல இணைப்பு விழா! விஜய் பட விறுவிறு...

சுருக்கம்

VIJAY TO LOCK HORNS WITH 2 POWERFUL POLITICIANS IN T62

விஜயின் 62 வது மதமாக உருவாகும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்கிறது விஜய் டீம். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படத்தை சன் பிக்ச்சர்ஸ் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படம் சமகால அரசியலை பேசும் படமாக உருவாகி வருகிறது.

விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிக்கொண்டிருக்கும் இதில், பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் அரசியல் கட்சித் தலைவர்களாக வருகின்றனர். இவர்களை மக்களில் ஒருவராக இருந்து எதிர்க்கும் பணியை விஜய்யின் கேரக்டர் செய்கிறது. அரசியல் தலைவர்களாக பழ.கருப்பையாவும் ராதாரவியும் நடிக்கிறார்கள் என முன்பு வெளியான படங்கள் மூலம் தெரிந்தது.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் படங்களின் மூலம் சமகால அரசியலை இந்த படம் பேசவிருக்கிறது எனத் தெரிகிறது. அந்த புகைப்படத்தில் “கழக இணைப்பு விழா அஇமமுக வருக வருக” என்கிற நுழைவாயில் முன்பாக ஒருபுறம் ராதாரவி கட் அவுட்டும் மற்றொருபுறம் பழ.கருப்பையா கட் அவுட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருபவர்கள், போட்டோவிலிருக்கும் அஇமமுகவை அதிமுகவாகவும், ராதாரவி மற்றும் பழ.கருப்பையாவை ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகவும் யூகத்தின் அடிப்படையில் கருதி கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது, கடந்த ஆண்டு முதல்வாராக இருந்த பன்னீரின் பதவியை பரித்துக்கொண்டதால், கட்சியிலிருந்து வெளியேறி தர்மயுத்தம் தொடங்கிய பன்னீர், சசிகலாவால் முதல்வரானதும், தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவந்த திமுக மற்றும் தினகரனை சமாளிக்க, ஆட்சியில் துணை முதல்வர் பதவி மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு கட்சியில்  முக்கிய பதவிகளை வாங்கிக்கொண்டு இண்டைந்து விட்டனர்.

அதேபோல தற்போது நடக்கும் அரசியல் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக, விஜய்யை சமாளிக்க ராதாரவியும் பழ.கருப்பையாவும் சேர்வது போன்ற முக்கியமான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது தற்போது நிறைவடைந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Union Budget 2026: தேர்தல் நேரத்திலும் தமிழகம் கண்ணுக்கு தெரியலையா? பெரிய ஏமாற்றம்.. கொந்தளித்த ஸ்டாலின்
ICU-வில் எச்.ராஜா.. மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி.. பாஜகவினர் நெகிழ்ச்சி!