தமிழ்நாட்டில் நிபா இல்லை... - உறுதி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

First Published May 28, 2018, 12:51 PM IST
Highlights
tamil nadu not affected by nibha virus


சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் பயன்பாட்டை தொடக்கி வைத்து விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். நுண் துளைகள் மூலம் அதிநவீன அறுவை சிகிட்சை செய்யும் ஒரு கருவியும் மூன்று அட்வான்ஸ் சிடி ஸ்கேன் விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படும் ஸ்கேனும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால் அவசர மற்றும் விபத்து நோயாளிகளுக்கு மிகவும் பயன்படும் எனத் தெரிவித்தனர்.  இரத்த  நாளங்கள் திசுக்கள் பரிசோதனை செய்ய 2 கருவிகளும் மக்கள் பயன்பாட்டு கொண்டு வந்துள்ளனர்

பழைய கட்டிடத்தினை சீரமைக்க 35 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. தொற்றா நோய்க்கு ஜப்பான் அரசு தமிழகத்திற்கு உதவி செய்யும் எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை. அது கேரளாவிலேயே கட்டுபடுத்தப்பட்ட்து என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழக கேரளா எல்லையோர பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அமைச்சர். பறவைகள் கொத்திய பழங்களை எதுவும் மக்கள் உண்ண வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

 

click me!