அதிமுக - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை..!

By karthikeyan VFirst Published Mar 1, 2021, 9:15 PM IST
Highlights

அதிமுக - பாஜக இடையேயான இடையேயான தொகுதிப்பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியான அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை உறுதிப்படுத்திவருகின்றன.

அதிமுக, கூட்டணி கட்சியான பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தேமுதிகவும் 20 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்ட நிலையில் அதற்கு அதிமுக உடன்படாததால் கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது தேமுதிக.

அதிமுக - பாஜக இடையேயான முதற்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான ஈபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இன்னும் தொகுதிகள் குறித்த உடன்பாடு எட்டப்பட்டு அறிவிக்கப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் 2வது கட்சியாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதனால் பாமகவை விட கூடுதல் தொகுதிகளை பெற பாஜக முனைகிறது. இந்நிலையில், அதிமுக - பாஜக இடையேயான 2ம் கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் மற்றும் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
 

click me!