சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டி.. காதர் மொய்தீன் அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Mar 1, 2021, 7:26 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.

திமுக கட்சி கூட்டணியில் இடம் பிடித்துள்ள கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்று வருகிறது. நேற்று முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதனையடுத்து, இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்;- திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவிடம் 5 தொகுகதிகள் கேட்ட நிலையில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் என காதர் மொய்தீன் கூறியுள்ளார். 
 

click me!