#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதி... மார்ச் 3ல் வெளியாகிறது அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 1, 2021, 7:22 PM IST
Highlights

ஆனால் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது திமுக. இன்றைய நிலவரப்படி திமுகவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

ஆனால் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், 20 - 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாம். இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், வரும் மார்ச் 3ம் தேதி காங்கிரஸ் - திமுக இடையிலான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதும் தெரியவரும். 
 

click me!