மத்திய அமைச்சர் அமித்ஷா வரும்போது மின்தடை போன்ற பிரச்சினை நடந்திருக்கிறது. அவர் பயண திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கெனவே தெரியும் என்று தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார் குஷ்பு.
தேசிய மகளிர் ஆணையஉறுப்பினர் குஷ்பு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தை பொருத்தவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை பாஜகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணியில் இருந்தபோதும் கட்சிக்காக தனிப்பட்ட முறையில் பணியாற்றக் கூடாதா என்ன ? என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர், 9 ஆண்டுகாலம் பாஜக தமிழகத்துக்கு என்ன செய்தது என கூறும் முதல்வர், எய்ம்ஸ் மட்டுமே கணக்கில் கொண்டு பேசி வருகிறார். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தமிழர்களுக்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும். அது அவ்வாறு சென்றடையவில்லை என்றால் நான் திமுக அரசை தான் குற்றம் சாட்டுவேன். அது முதல்வரின் தவறுதான். மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் குறித்து திமுக அரசுக்கு தெரியவில்லை.
இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!
அப்படி தெரிந்திருந்தும் மக்களுக்கு அதனை அவர்கள் கொடுக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்துக்காக என்ன செய்திருக்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வரும்போது மின்தடை போன்ற பிரச்சினை நடந்திருக்கிறது. அவர்பயண திட்டம் குறித்து மாநில அரசுக்கு ஏற்கெனவே தெரியும். பெரியளவு மழை இல்லாதபோதும் மின்தடை ஏற்பட்டது. இதில் தங்களுக்கு தொடர்பில்லை என அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் நான் போட்டியிடுவது குறித்தும் கட்சி தலைமைதான் முடிவு செய்யும். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருக்கிறேன். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை பலனளிக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியும் என்றும், மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் ஆணையம் தலையிட முடியாது என்றும் குஷ்பு கூறினார்.
இதையும் படிங்க..இபிஎஸ் & ஓபிஎஸ்சை சந்திக்காத அமித்ஷா.. என்னவா இருக்கும்? அண்ணாமலை கொடுத்த அடடே பதில் !!