விஜய் திருமண மண்டபங்களுக்கு சிக்கல்... விடாது துரத்தும் அ.தி.மு.க. அரசு

By vinoth kumarFirst Published Nov 14, 2018, 10:11 AM IST
Highlights

சர்கார் பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது என்று தாங்களே இறங்கிவந்து அறிவித்த பிறகும் விஜய் தரப்பு அடங்கவில்லை என்று அ.தி.மு.க. தரப்பு கடுப்பானதை ஒட்டியே இந்த நடவடிக்கை துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மிக்ஸி, கிரைண்டர் வைத்து சக்சஸ் பார்ட்டி கொண்டாடியது, தனது ஆதரவாளர்கள் மூலம் அடுத்து ‘சர்கார் 2’ படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று வெறுப்பேற்றியதற்கு உடனடி ரியாக்‌ஷனாக, விஜய்யின் கல்யாண மண்டபங்கள், சென்னையிலுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை  சட்டரீதியான ஆராய்ச்சிக்கு உட்படுத்த ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க. அரசு.

படங்களில் நீதி, நேர்மை குறித்து ஆவேசமாக வசனம் பேசி நடிக்கும் விஜய் பொது வாழ்வில் நேர்மையற்றவர். படங்களுக்கு வாங்கும் சம்பளங்களில் முக்கால்வாசியை கருப்புப் பணமாகத்தான் வாங்குகிறார் என்று மேடைகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் ஏற்கனவே முழங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக அவரை ஆதாரபூர்வமாக தோலுரிக்க வேண்டும் என்று அமைச்சர்களுடன் கூடி முடிவெடுத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி. 

‘சர்கார்’ பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டுவிட்டது என்று தாங்களே இறங்கிவந்து அறிவித்த பிறகும் விஜய் தரப்பு அடங்கவில்லை என்று அ.தி.மு.க. தரப்பு கடுப்பானதை ஒட்டியே இந்த நடவடிக்கை துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதன்படி முதல் சிக்கலுக்கு ஆளாகியிருப்பவை விஜய்யின் திருமண மண்டபங்கள். விஜய் வெளிப்படையாக சென்னையில் முறையே வடபழனி குமரன் காலனி, அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதிகளில் மூன்று திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார். இவை விஜய், அவரது அம்மா ஷோபா மற்றும் அவரது மனைவி சங்கீதா பெயர்களில் உள்ளன. இவற்றுக்கு முறையான பத்திரப்பதிவுகள் உள்ளதா, மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா வேறென்ன வில்லங்கங்கள் உள்ளன என்று முதல் குடைச்சலைத் துவங்கியிருக்கிறார்கள். 

அடுத்த கட்டமாக வடபழனி சாலிகிராமம் பகுதியில் உள்ள 24 மாடி குடிருப்பு ஒன்றின் முதல் 12 மாடிகள் விஜய் பெயரிலும் மீதி 12 மாடிகள் அவரது தந்தை எஸ்.ஏ.சி.பெயரிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இக்கட்டிடத்திற்கு முறையான மாநகராட்சி அனுமதி பெறப்படவில்லை என்று தெரிகிறது. இக்கட்டிடம் தொடர்பான முறைகேடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தோண்டி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோக படங்களுக்கு விஜய் வாங்கும் சம்பளம். அதில் வாங்கும் கருப்புப் பணங்களை எப்படி முதலீடு செய்கிறார். இன்று வரை பிரிடிஷ் குடியுரிமை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் விஜய் மனைவி சங்கீதா என்னென்ன தொழில் செய்கிறார், அவற்றுக்கு ரிசர்வ வங்கி அனுமதி உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விஜயை நெருக்கி அவரது இமேஜை காலி பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் விஜய் படங்களில் மட்டுமல்ல கனவிலும் கூட அவருக்கு அரசியல் ஆசை வரக்கூடாது என்று கொக்கரிக்கிறதாம் அ.தி.மு.க. கூடாரம்.

click me!