நாங்க ராத்திரி 8.30-க்கு வரச் சொன்னா நீங்க காலையில 8.30 மணிக்கே வந்துட்டீங்களே! நடிகர் விஜய் அப்பாவை திருப்பி அனுப்பிய கோபாலபுரம்!

 
Published : Dec 01, 2017, 03:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
நாங்க ராத்திரி 8.30-க்கு வரச் சொன்னா நீங்க காலையில 8.30 மணிக்கே வந்துட்டீங்களே! நடிகர் விஜய் அப்பாவை திருப்பி அனுப்பிய கோபாலபுரம்!

சுருக்கம்

Actor Vijay father was sent back from Gopalapuram

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இரவு 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், காலை 8.30 மணிக்கே எஸ்.ஏ.சந்திரசேகரின் மேனேஜர் வந்ததால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக, நடிகர் விஜய்-ன் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்று இரவு 8.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 8.30 மணிக்கான சந்திப்பை, காலை 8.30 என்று தவறுதலாக புரிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், எஸ்.ஏ.சந்திரசேகரின் மேனேஜர், செய்தியாளர்களுக்கு இன்று காலை 8.30 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வருவதாக தகவல் அனுப்பினார்.

விஜய்-ன் தந்தை, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வருகிறார் என்பதை அறிந்த செய்தியாளர்கள், சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தனர். இன்று காலை சுமார் 8 மணியளவில் எஸ்.ஏ.சந்திரசேகரின் மேனேஜரும் வந்து சேர்ந்தார். அவர் உள்ளே சென்று கருணாநிதியின் உதவியாளரிடம் பேசியபோது, இன்று இரவு 8.30 மணிக்குத்தானே நேரம் ஒதுக்கப்பட்டது? எதற்காக இப்போது வந்தீர்கள்? என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே நேரத்தை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்தார் அந்த மேனேஜர்.

பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம், மன்னித்துக் கொள்ளுங்கள். நேரத்தை சரியாக கவனிக்காமல் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துவிட்டேன். இதையடுத்து செய்தியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!