அவங்க புளுகுறாங்க! அம்மா இரும்பு பெண்மணி! கொச்சைப்படுத்துவது வேதனையாக இருக்கிறது! புதிர் போடும் புகழேந்தி!

First Published Dec 1, 2017, 3:24 PM IST
Highlights
Bengaloru Pugulandi Torment


அரசியலில் அசைக்க முடியாத இரும்பு பெண்ணாக திகழ்ந்த ஜெயலலிதாவின் புகழை, அவரது மறைவுக்குப் பிறகு கொச்சைப்படுத்துவது வேதனையாக உள்ளது என்று புகழேந்தி கூறியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவின் மகள் தான் என்றும், இது குறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்தார் உண்மை வெளியாகும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்ருதாவை, சென்னை அல்லது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யம்படி அறிவுறுத்தியது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் உறவினர், ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாகவும் அது அம்ருதா என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து ஓரிரு தினங்கள் கழித்து, ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி கீதா. சென்னையைச் சேர்ந்த கீதா, ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது மரணத்துக்கு நீதி விசாரணை தேவை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்றும் கூறி வந்தார். இந்த நிலையில், கீதா தற்போது புதிய குண்டை வீசியுள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பது உண்மைதான் என்றும் அந்த மகள் அம்ருதா என்றும் அவர் கூறியுள்ளார். 

நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்த பெண் தான் அம்ருதா. இது ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தெரியும் என்றார். அம்ருதா, 1996 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்தது தனக்கும் தெரியும் என்று கூறினார்.‘

கீதாவின் இந்த பேச்சுக்கு, டிடிவி தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளா. இது குறித்து பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் உயிரோடு இருந்தபோது அடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கடுமையாக கூறினார்.

தன்னை ஜெயலலிதாவின் சகோதரி என்று கடந்த 12, 13 ஆண்டுகளாக கூறி வந்த ஷைலஜா இறந்து விட்டார். அவரது இறப்புக்குப் பிறகு அவரது மகள் அம்ருதா புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார் என்றார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் கூறினார். ஜெயலலிதா மிகப்பெரிய தலைவர். அரசியலில் அசைக்க முடியாத இரும்புப் பெண்ணாக இருந்தவரின் புகழை அவரது மறைவுக்குப் பிறகு கொச்சைப்படுத்துவது வேதனையாக உள்ளது.

அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் லலிதா, அம்ருதா, கீதா ஆகியோர் மீது கர்நாடக போலீசில் புகார் கொடுத்து அவர்களை விரைவில் சிறைக்கு அனுப்புவேன் என்றும் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் புகழேந்தி கூறினார்.

click me!