நடிகர் சூர்யா எதை பேசினாலும் உளறிக் கொட்டுகிறார்... ராதாரவி ஆத்திரம்..!

Published : Sep 21, 2020, 02:49 PM IST
நடிகர் சூர்யா எதை பேசினாலும் உளறிக் கொட்டுகிறார்... ராதாரவி ஆத்திரம்..!

சுருக்கம்

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.  

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும். ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்றதற்கு ரஜினியும் காரணம். தயாநிதி மாறனை எம்பி ஆக்கியதற்கு காரணம் அவருக்கு இந்தி தெரியும் என்பதற்காக என்று கருணாநிதியே தெரிவித்தார்.

நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் நல்லது தான். நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயார். நடிகர் சூர்யா எதை பேசினாலும் தெரியாமல் பேசுகிறார். அம்பேத்கரைப் பற்றி பேச பாஜகவிற்கு மட்டுமே தகுதி உள்ளது. அம்பேத்கருக்கு லண்டனில் வீடு கட்டியவர்கள் பாஜகவினர். இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் உருப்படாது’’என அவர் தெரிவித்தார்.

நயன்தாரா குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்ததற்கு நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுகவில் இருந்து விலகிய ராதாரவி, அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!