இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை..!! அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து ஊத்தப்போகிறது மக்களே..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2020, 1:46 PM IST
Highlights

வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல், மிக கனமழையும்

வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல், மிக கனமழையும், தேனி,  திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி (நீலகிரி) 18 சென்டிமீட்டர் மழையும், மேல் பவானி (நீலகிரி) 12 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை (கோவை) தேவலா (நீலகிரி) 10 சென்டி மீட்டர் மழையும், சின்னக்கல்லார் (கோவை) 10 சென்டி மீட்டர் மழையும் சின்கோனா(கோவை) சோலையார் (கோவை) தலா 9 சென்டிமீட்டர் மழையும், பெரியாறு (தேனி) பந்தலூர் (நீலகிரி0 தல 6 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 9கோவை) 5 சென்டி மீட்டர் மழையும், கொட்டாரம், (கன்னியாகுமரி) சிவலோகம் (கன்னியாகுமரி) தேக்கடி தேனி தலா4 சென்டிமீட்டர் மழையும், பாபநாசம் (திருநெல்வேலி) 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 21,22 மன்னார் வளைகுடா பகுதிகள் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 21,22 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடகா கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், 

செப்டம்பர் 23 மகாராஷ்டிர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 21 வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 22 தென்மேற்கு மத்திய மேற்கு, வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக ஆந்திர ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 21,22 தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 25 வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி 22-9-2020 இரவு பதினொன்று முப்பது மணி வரை கடல் உயரம் 1.3 மீட்டர் முதல் 3.9 மீட்டர் வரை எழும்ப கூடும், எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

click me!