5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் திமுக.. தேதியை குறித்து அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Sep 21, 2020, 1:36 PM IST
Highlights

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வரும் 28ம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வரும் 28ம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் அதிமுக ஆதரவுடன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஆனால், மாநிலங்களவையில் பெரும் அமளிகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. 

இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என பாஜகவினர் கூறி வந்தாலும், இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரானது என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மசோதாவிற்கு நாடு முழுவது் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல், இந்தி திணிப்பு, நீட் விவகாரம், புதிய கல்வி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசு மீதும் திமுக அதிருப்தி தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில்,  சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே இன்று  தோழமை கட்சிகளின் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  இதில், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.  இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேளாண் மசோதாவுக்கு எதிராக வரும் 28 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தோழமை கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!