Mr ரஜினி தேவையா இது உங்களுக்கு.. நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்க: சூப்பர் ஸ்டாரை பிடித்து உலுக்கும் சிபிஎம்

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2022, 4:41 PM IST
Highlights

மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும்போது ரஜினிகாந்த் போன்ற சினிமா பிரபலங்கள் பொருத்தமற்ற முறையில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும்போது ரஜினிகாந்த் போன்ற சினிமா பிரபலங்கள் பொருத்தமற்ற முறையில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தேவையற்ற கருத்துக் கூறிய நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது அதில் காவல்துறை வரம்பு மீறி நடந்து கொண்டது என்றும் அதுவே துப்பாக்கிச் சூட்டு துயரத்திற்கு காரணம் என்றும், கிட்டத்தட்ட 14 காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தி உள்ளது.

இந்த அறிக்கை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக் காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என எடப்பாடி பழனிச்சாமி  கூறியிருந்த கருத்து முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அருணா ஜெகதீசன் அறிக்கை தெரிவித்துள்ளது. அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்களை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம்  தெரிவித்துக் கொண்டிருந்தனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:  குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. எடப்பாடி துரோகம் எல்லோருக்கும் தெரியும். ரவுண்டு கட்டி அடித்த ஸ்டாலின்.

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் குற்றவாளியாக சேர்த்து வழக்கு தொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த கலவரம் நடந்த சில தினங்கள் கழித்து சம்பவ இடத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்  போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல சமூக விரோதிகள்தான் ஊடுருவி விட்டனர்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எப்படி சமூக விரோதிகள் வன்முறை ஏற்படுத்தினார்களோ, அதே போல இங்கு வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர். காவல் துறையை தாக்கியது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி, தீயிட்டுக் கொளுத்தியது, ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்புக்கு தீ வைத்தது  அனைத்துமே சமூகவிரோதிகள் தான் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், வன்முறையில் ஈடுபட்டது சமூகவிரோதிகள் தான் என்பதை எப்படி தாங்கள் எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என கேட்டதற்கு எல்லாம் எனக்கு தெரியும் செய்தது  இதேபோல போராட்டம் போராட்டம் என்றால் தமிழ் நாடு சுடுகாடாக மாறிவிடும் என பேசிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றார் சமூக விரோதிகள் யார் என்பதை ரஜினிகாந்த் வெளியிட வேண்டும் என்றும் பலரும் அப்போது வலியுறுத்தி வந்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையிலும் இங்கிலாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு சமூகவிரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: அப்பாவி மாதிரி பேசிய எடப்பாடியும் இதுல குற்றவாளிதான்.. கேஸ் போட்டு தூக்குங்க.. கொதிக்கும் கே.பாலகிருஷ்ணன்.

இதற்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன்  முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை, ஆனால் எழுத்துப்பூர்வமாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், தூத்துக்குடி சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது ,தொலைக்காட்சியைப் பார்த்து தான் அதை தெரிந்து கொண்டேன், அதே போல் சொன்னது போல சமூக விரோதிகள் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது, சமூக விரோதிகளாக செயலாக இருக்கலாம் எனத் தான் கருதியதால் அப்படி பேசியதாகவும் அவர் கூறினார். இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது என மழுப்பினார் .அப்போது ரஜினிகாந்த் போன்றவர்கள் பொது விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும் என்றும், பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என  அருணா ஜெகதீசன் ஆணையம் அவருக்கு அறிவுரை கூறியது.

 தற்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு அறிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியையும் இந்த சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் இந்நிலையில் இதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தில் தேவையில்லாமல் பொருந்தாக் கருத்துக்களை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது

மக்கள் தங்கள் அனுபவத்திலிருந்து போராடிக் கொண்டிருந்த போது, பொருத்தமற்ற முறையில் அரசியல் மற்றும் சுயநல நோக்கில் இருந்து 4 காவல்துறையினரை தாக்கிய பிறகுதான் காவல்துறையினர் திருப்பி தாக்கினார்கள்’ என்று பேசிய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பிற பிரபலங்கள் எதிர்காலத்தில் இத்தகைய தேவையற்ற கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.  

திரு. ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு என்று மட்டும் இந்த சம்பவத்தை தமிழக அரசு தனித்துப் பார்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களை அப்பட்டமாக மேற்கொண்டு, சட்ட விரோதமாகவே நடந்துகொண்டு வந்திருக்கிறது அந்த நிறுவனம். என கே பாலகிரிஷ்ணன் கூறியுள்ளார். 

 

click me!