சட்டப்பேரவையில் தன் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது பேரவையின் விதிகளில் இல்லாத ஒன்று. சட்டப்பேரவை விதிகள் 2 ஓ படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதியில் உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி பொய் கூறியது அம்பலமாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்ததியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சட்டப்பேரவையில் தன் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்வதை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது பேரவையின் விதிகளில் இல்லாத ஒன்று. சட்டப்பேரவை விதிகள் 2 ஓ படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதியில் உள்ளது. சட்டப்பேரவையை ஜனநாயக முறையில் சபாநாயகர் வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். சட்டப்பேரவை தலைவர் மீது அதிமுகவினர் தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். சட்டப்பேரவை தலைவரை குறைகூறுவது என்பது அதிசயமாக இருக்கிறது. பேரவைத் தலைவர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து அதிமுகவினர் கூச்சலிட்டனர். ஆகையால், சட்டப்பேரவையின் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர் என மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க;- அப்பாவி மாதிரி பேசிய எடப்பாடியும் இதுல குற்றவாளிதான்.. கேஸ் போட்டு தூக்குங்க.. கொதிக்கும் கே.பாலகிருஷ்ணன்.
துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்துகொண்டதாக பழனிசாமி பொய் கூறியது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக செயல்பட்டதாகவும், அசட்டையாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. உளவுத்துறை தகவல் அளித்தும் இபிஎஸ் அலட்சியமாக இருந்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனக்கு இருக்கும் நெருக்கடியை மறைக்க இபிஎஸ் முயல்கிறார்.
மேலும், சட்டமன்றம் நடைபெறும் நேரங்களில் மாநகர பகுதிகளில் போராட்டங்களுக்கு அனுமதி கிடைக்காது என்று தெரிந்தும் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கவும் வழிவகுத்துள்ளார். வேண்டுமென்றே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துவிட்டது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் நடவடிக்கைகள் மேற்கொள்வார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதையும் படிங்க;- அனில் அகர்வாலை திருப்திப்படுத்த தூத்துக்குடி படுகொலை அரங்கேற்றபட்டதா? இபிஎஸ்-ஐ எகிறி அடிக்கும் சீமான்.!