விரைவில் பாஜகவில் இணையும் ஆக்ஷன் ஹீரே..?? வீட்டுக்கே போய் சந்தித்து அதிர்ச்சி கொடுத்த உள்துறை அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 9, 2021, 11:16 AM IST
Highlights

கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் கூட தங்கள் கட்சிக்கென தனித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியில் பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று மரியாதை நிமித்தமாக நடிகர் அர்ஜுனை மத்திய உள்துறை இணை அமைச்சர் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினர். அதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கென தனி அடையாளத்தை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதேபோல் இரட்டை இலக்க வெற்றியை பெற்று தமிழக சட்டமன்றத்திற்கு நுழைய வேண்டும் எனவும் அதி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் கூட பாஜகவுக்கென தனித்துவத்தை நிலைநாட்டும் முயற்சியில் பாஜக தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள அரசியல்  மற்றும் திரை பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு பாஜகவில் ஐக்கியமானார், நடிகர் ராதாரவி, கவுதமி உள்ளிட்ட இன்னும் பல ஏராளமான திரை பிரபலங்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இன்னும் பலர் ஆர்வமான இணைந்து வருகின்றனர்.அந்த வகையில் பாஜக முக்கிய தலைவர்களும் பிரபலங்களை சந்தித்து  கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர், ஆக்சன் கிங் அர்ஜுன்  அவர்களை  இன்று மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது அரசியில் குறித்து பேசப்பட்டிருக்க கூடும் என தெரிகிறது. 

ஏற்கனவே,  நடிகர் அர்ஜுன் இந்து மதத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் ஆவார். அவர் சென்னை போரூர் அருகே கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயருக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளார்.அதற்காக கர்நாடக மாநிலம்  கொய்ராவில் இருந்து  சுமார் 140 டன் எடை கொண்ட  28 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை கொண்டு வந்து ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார். அவரின் இந்த செயலை வரவேற்று கடந்தாண்டு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அர்ஜுனை சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!